பாலிவுட்

திருமணம் என்னும் பந்தம் காலாவதியாகிவிட்டதா? - ஜெயா பச்சன் பதிலால் கிளம்பிய விவாதம்!

ப்ரியா

மாநிலங்களவை உறுப்பினரும், நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன், திருமண பந்தம் குறித்து அண்மையில் பேசியுள்ள கருத்துக்கள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளன.

‘வீ தி வுமன்’ என்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜெயா பச்சன், தமது பேத்தியான நவ்யா நவேலி நந்தா அவசரப்பட்டு திருமணம் செய்துகொள்வதைத் தாம் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

திருமணம் என்ற அமைப்பு இன்றைய காலகட்டத்தில் காலாவதியாகிவிட்டதா என்ற கேள்விக்கு, “ஆம்” என்ற பதிலளித்த அவர், உணர்வுபூர்வமான பாதுகாப்பு, தோழமை அல்லது அன்புக்கு திருமணத்தின் சட்டப்பூர்வ அங்கீகாரம் இனி தேவையில்லை என்றார். மேலும் ஒரு உறவு அர்த்தமுள்ளதாக இருக்க, அது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “திருமணம் என்பது ஒரு ‘டெல்லி லட்டு’ போன்றது. அதைச் சாப்பிட்டாலும் கஷ்டம், சாப்பிடாமல் தவிர்த்தாலும் கஷ்டம்தான். அதனால், இளைஞர்கள் சமூகத்தின் அழுத்தத்திற்குக் கட்டுப்படாமல், தங்களின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இன்றைய இளைஞர் சமுதாயம் முந்தைய தலைமுறையை விட அதிக விழிப்புணர்வு, சுதந்திரமான பார்வை மற்றும் நம்பிக்கையுடன் உள்ளனர். அவர்களது முடிவுகளைப் பெரியவர்கள் திணிக்கக் கூடாது” என்று ஜெயா பச்சன் கூறினார்.

திருமணம் அமைப்பு காலவதியாகிவிட்டதாக கூறிய அவரது கருத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன.

SCROLL FOR NEXT