பாலிவுட்

தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது ஏன்? - ஹூமா குரேஷி விளக்கம்

நிலா

தமிழில் ரஜினி​யின் ‘காலா’, அஜித்​தின் ‘வலிமை’ படங்​களில் நடித்​திருப்​பவர், இந்தி நடிகை ஹூமா குரேஸி. இவர் நடிகரும் நடிப்​புப் பயிற்​சிப் பயிற்​றுநரு​மான ரசித் சிங்கை காதலித்து வரு​வ​தாக​வும் இரு​வரும் விரை​வில் திரு​மணம் செய்​து​கொள்ள இருப்​ப​தாக​வும் செய்​தி​கள் வெளி​யானது.

இந்​நிலை​யில் அதை மறுத்​துள்ள ஹூமா குரேஷி, “திரு​மணம் எப்​போது நடக்க வேண்​டுமோ அப்​போது நடக்​கும்; தற்​போது எனது முழுக் கவன​மும் நடிப்​பிலும் தயாரிப்​பிலும் உள்​ளது. திரு​மணம் குறித்து பரவும் செய்தி பற்​றி​தான் என் அம்​மா​வும் கேட்​கிறார்.

திரு​மணம் எப்​போது நடக்​கும் என்​ப​தற்கு என்​னிடம் இப்​போது பதில் இல்​லை. அது எப்​போது நடக்க வேண்​டுமோ அப்​போது நடக்​கும். இந்த ஆண்டு சினிமா வேலைகள் எனக்கு அதி​கம். தற்​போது சினி​மா​வில் மட்​டுமே கவனம் செலுத்தி வரு​கிறேன். தயாரிப்பு நிறு​வனம் தொடங்​கியது ஏன் என்று கேட்​கிறார்​கள்.

நடிகர்​களாகத் தங்​களுக்​கான வாய்ப்​புக்​காக மற்​றவர்​களை எதிர்​பார்த்​துக் காத்​திருப்​பதை விட, சொந்​த​மாக வாய்ப்​பு​களை உரு​வாக்​கவே, எனது சகோ​தரர் சாகிப் சலீ​மும் இணைந்து ‘சலீம் சிப்ளிங்​ஸ்’ என்ற தயாரிப்பு நிறு​வனத்​தைத் தொடங்​கி​யுள்​ளேன்” என்​றார்.

SCROLL FOR NEXT