நடிகை சஞ்சிதா உகாலே
இந்தித் தொலைக்காட்சித் தொடர் நடிகை சஞ்சிதா உகாலே (22) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியில் வெளியான ‘கும்கும் பாக்யா’, ‘தில்வாலி துல்ஹா லே ஜாயேகி’, ‘க்ரைம் பேட்ரோல்’ உள்பட பல சின்னத்திரை தொடர்களில் நடித்திருப்பவர் சஞ்சிதா உகாலே. இவர் மும்பை அருகிலுள்ள நலசோபரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் சேலையால் ஃபேனில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அவர் உடலைக் கைப்பற்றிய போலீஸார், அது தற்கொலை தான் என்றும் அதற்கான காரணம் பற்றி விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பாலிவுட் சின்னத்திரை உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.