பாலிவுட்

ஷில்பா ஷெட்​டி​யின் மார்​பிங் புகைப்​படங்​கள்: உடனடி​யாக நீக்க உயர் நீதி​மன்​றம் உத்​தரவு

செய்திப்பிரிவு

செயற்கை நுண்​ணறி​வால் உரு​வாக்​கப்​பட்ட நடிகை ஷில்பா ஷெட்​டி​யின் போலி புகைப்​படங்​களை உடனடி​யாக நீக்க மும்பை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

நடிகை ஷில்பா ஷெட்​டி, தனது ஆளுமை உரிமை​களைப் பாது​காக்​கக் கோரி மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​தார். அதில், தனது புகைப்​படங்​கள், வீடியோக்​கள் மற்​றும் குரலை செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்தி போலி​யாக உரு​வாக்​கி​யுள்​ளனர் என்​றும் மார்​பிங் செய்​யப்​பட்ட தனது புகைப்​படங்​களை இணை​யத்​தில் பரப்பி வரு​கின்​றனர் என்​றும் அது தனது நற்​பெயருக்கு களங்​கத்தை ஏற்​படுத்தி வரு​வ​தாக​வும் கூறி​யிருந்​தார்.

அது தொடர்​பான ஆவணங்​களை​யும் சமர்ப்​பித்​திருந்​தார். இந்த வழக்​கு, நீதிபதி அத்​வைத் சேத்னா தலை​மையி​லான விடு​முறை கால அமர்வு முன் விசா​ரணைக்கு வந்​தது.

செயற்கை நுண்​ணறி​வால் உரு​வாக்​கப்​பட்​டுள்ள நடிகை ஷில்பா ஷெட்​டி​யின் புகைப்​படங்​கள் அதிர்ச்​சி​யளிப்​ப​தாக இருக்​கிறது என்ற நீதி​மன்​றம், எந்த ஒரு​வரை​யும் குறிப்​பாக ஒரு பெண்ணை அவரது ஒப்​புதல் இல்​லாமல் இவ்​வளவு எதிர்​மறை​யான வெளிச்​சத்​தில் சித்​தரிக்க முடி​யாது என்​றும் இது அவரது தனி​யுரிமை மீதான நேரடித் தாக்​குதல் என்​றும் தெரி​வித்​தது.

பின்​னர் அது தொடர்​பான அனைத்து இணைப்​பு​கள் மற்​றும் உள்​ளடக்​கங்​களை​யும் சமூக ஊடகங்​கள் மற்றும் இணை​யத்​திலிருந்து உடனடி​யாக நீக்க உத்​தரவிட்​டது.

SCROLL FOR NEXT