பாலிவுட்

விஜய் சேதுபதியின் ‘காந்தி டாக்ஸ்’ டீசர் வெளியானது!

செய்திப்பிரிவு

ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் கிஷோர் பி.பெலேகர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி இணைந்து நடிக்கும் படம் 'காந்தி டாக்ஸ்'. வசனமில்லா மவுனப் படமாக உருவாகும் இப்படத்தில் அதிதி ராவ் நாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

படம் ப்ளாக் காமெடி ஜானரில் வசனங்களற்ற மவுனப்படமாக உருவாக உள்ளது. இது மவுனப் படமாக இருப்பதால், அனைத்து ‘மொழி’ தடைகளையும் உடைத்து, மறந்து போன கடந்த கால மவுனப் பட சகாப்தத்தை - நிகழ்காலத்தில் பார்வையாளர்களுக்கு தரும் எனக் கூறப்படுகிறது.

இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. வசனங்கள் இல்லாமல் ஓடும் டீசருக்கு உயிரூட்டுகிறது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. இப்படம் தொடர்பாக இயக்குநர் கிஷோர் பி.பெலேகர் கூறுகையில், ''மவுனப் படம் என்பது வித்தை காட்டும் ஒரு செயல் அல்ல இது கதைசொல்லலின் ஒரு வடிவம். பேசும் மொழியான வசனத்தை முற்றிலும் நிராகரித்துவிட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கடினமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமும் சவாலும் கூட'' என தெரிவித்துள்ளார். 

SCROLL FOR NEXT