பாலிவுட்

‘டான் 3’ பட விவ​காரம்: ரன்​வீர் சிங்குக்கு எதி​ரான தடை நீக்கம்

நிலா

பிரபல பாலிவுட் நடிகர் ரன்​வீர் சிங், பர்​ஹான் அக்​தரின் ‘டான் 3’ படத்​தில் நடிக்க இருந்​தார். படத்​துக்​கான முன் தயாரிப்பு பணிகள் நடை​பெற்று வந்த நிலை​யில் கடைசிக் கட்​டத்​தில் அவர் அப்​படத்​தில் இருந்து வில​கி​னார்.

‘துரந்​தர்’ சூப்​பர் ஹிட் வெற்றி பெற்​ற​தால் அவர் ‘டான் 3’ படத்திலிருந்து வில​கிய​தாகக் கூறப்​பட்​டது. அவர் வில​கிய​தால் ரூ.45 கோடி வரை நஷ்டம் ஏற்​பட்​ட​தாக தயாரிப்​பாளர் பர்​ஹான் அக்​தர், மேற்​கிந்​தி​யத் திரைப்​படத் தொழிலா​ளர்​கள் கூட்டமைப்பில் புகார் அளித்​தார். அக்​கூட்​டமைப்​பு, ரன்​வீர் சிங் படங்​களுக்கு ஒத்​துழைப்பு வழங்​க​மாட்​டோம் என்று அறி​வித்​தது.

இது பரபரப்​பானதை அடுத்​து, திரைப்​படத் தொழிலா​ளர்​கள் கூட்டமைப்​புக்கு ரன்​வீர் சிங் வக்​கீல் நோட்​டீஸ் அனுப்​பி​னார். இதனைத் தொடர்ந்​து, தயாரிப்​பாளர்​கள் கில்​டு, இந்​தி​யத் திரைப்பட தயாரிப்​பாளர்​கள் சங்​கம், திரைப்​படம் மற்​றும் சின்னத்​திரை கலைஞர்​கள் சங்​கம் உள்​ளிட்ட திரைத்​துறை அமைப்​பு​கள் தலை​யிட்​டுப் பேச்​சு​வார்த்தை நடத்​தின. இதனால் ரன்​வீர் சிங் மீதான தடையை உடனடி​யாக மேற்​கிந்​தி​யத் திரைப்படத் தொழிலா​ளர்​கள் கூட்​டமைப்பு திரும்​பப் பெற்றுள்ளது.

இவ்​வ​மைப்​பின் தலை​வர் பி.என்​.​தி​வாரி கூறும்​போது, “இந்த விஷயத்​தில் யாரும் ஜெயிக்​க​வும் இல்​லை, தோற்​க​வும் இல்​லை. தயாரிப்​பாளர்​கள், இயக்​குநர்​கள் மற்​றும் நடிகர்​களுக்கு எந்​தப் பிரச்​சினை​யும் ஏற்​ப​டாத வண்​ணம், ஒன்​றாகப் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்​டு” என்று தெரிவித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT