ரன்வீர் சிங் நடித்து சூப்பர் ஹிட்டான இந்தி திரைப்படம் துரந்தர்’. சஞ்சய் தத், மாதவன், அக் ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன் உள்பட பலர் நடித்த இப்படத்தை ஆதித்யா தார் இயக்கி உள்ளார்.
இது ரூ.1,300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. மார்ச் 19-ல் வெளியாக இருக்கும் இப்படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப் பெரிய ஓப்பனிங் வசூலை இப்படம் குவிக்கும் என்கிறார்கள்.
இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ‘துரந்தர்’ படத்தை இப்போது ரீ- ரிலீஸ் செய்துள்ளனர். உலகளவில் 500 திரைகளில் மட்டுமே வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ரசிகர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைகளில் மார்ச் 13ம் தேதி ரீ- ரிலீஸ் செய்துள்ளனர்.