பாலிவுட்

ரூ.1000 கோடி வசூலை நோக்கி செல்லும் ‘துரந்​தர்’

செய்திப்பிரிவு

ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யாகி உள்ள பாலிவுட் திரைப்​படம் ‘துரந்​தர்’. இதில், மாதவன், அக்‌ஷய் கன்​னா, அர்​ஜுன் ராம்​பால், சஞ்​சய் தத், சாரா அர்ஜுன் உள்பட பலர் நடித்துள்​ளனர். ‘உரி: தி சர்​ஜிகல் ஸ்டிரைக் 2019’ என்ற திரைப்​படத்தை இயக்​கிய ஆதித்யா தார் இயக்கி உள்​ளார்.

ஸ்பை த்ரில்​லர் படமான இது, உளவு அதி​காரியை பற்​றிய கதயைக் கொண்​டது. 1999-ம் ஆண்டு காந்​த​காரில் இந்​திய விமானம் கடத்​தப்​பட்​டது. அடுத்த 2 ஆண்​டு​களில் டெல்லி நாடாளு​மன்​றத்​தின் மீது பயங்​கர​வாத தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதற்​குப் பதிலடி கொடுப்​ப​தற்​காக, ஹம்சா என்ற பெயரில் பாகிஸ்​தானுக்​குள் உளவாளி​யாகச் செல்​லும் ரன்​வீர் சிங் இந்​தி​யா​வுக்கு எதி​ரான சதித்​திட்​டங்​களைக் கண்​டு​பிடித்து எப்​படி முறியடிக்​கிறார் என்​பது இதன் கதை.

இந்த மூன்​றரை மணி நேரப் படம், வெளி​யான நாளி​லிருந்து அதிக வசூல் ஈட்டி வரு​கிறது. இப்​போது ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நோக்​கிச் சென்று கொண்​டிருக்​கிறது. இந்​தி​யா​வில் மட்​டும் இது​வரை ரூ.500 கோடியைத் தொட்​டிருக்​கிறது. உலகம் முழு​வதும் ரூ.730 கோடி வசூலைத் தாண்​டி​யுள்ள இப்​படம், இன்​னும் சில நாட்​களில் ரூ.1000 கோடி வசூலை எட்​டும் என்​கிறார்​கள்.

இந்​தாண்டு அதிக வசூல் செய்த பாலிவுட் படங்​களில் ‘ஜா​வா’வை அடுத்​து, ‘துரந்​தர்’ படம் இருக்​கிறது. ரன்​வீர் சிங் நடித்த படங்​களில் அதிக வசூல் செய்த படமாக​வும் இது உள்​ளது.

SCROLL FOR NEXT