பாலிவுட்

வளைகுடா நாடுகளில் ‘துரந்தர்’ படத்துக்குத் தடை

செய்திப்பிரிவு

ரன்வீர் சிங், மாதவன், சஞ்சய் தத், அக் ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்திப் படம், ‘துரந்தர்’. டிச.5-ம் தேதி வெளியான இப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆதித்யா தார் இயக்கியுள்ளார்.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத நெட்வொர்க்கை அழிக்க, அவர்கள் குழுவுக்குள் ரன்வீர் சிங் எப்படி ஊடுருவி அவர்களது திட்டங்களை எவ்வாறு முறியடிக்கிறார் என்பது கதை. 3.30 மணி நேரம் கொண்ட இந்தப் படம், விறுவிறுப்பான திரைக்கதை, சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல்களுக்காக ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள இந்தப் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வளைகுடா நாடுகளில் இப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானுக்கு எதிரான படம் என்று கூறி, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் இப்படத்தை வெளியிடவில்லை.

SCROLL FOR NEXT