ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், அக் ஷய் கன்னா உள்பட பலர் நடித்து வெற்றிபெற்ற ‘துரந்தர்’ படத்தின் அடுத்த பாகம், ‘துரந்தர்: த ரிவெஞ்ச்’ என்ற பெயரில் உருவானது. ஆதித்யா தார் இயக்கிய இப்படம் மார்ச் 19 அன்று வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ரூ.1,783 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
‘புஷ்பா 2’ படத்தின் மொத்த வசூலான ரூ.1,742 கோடியை ஏற்கெனவே முந்திய இப்படம், அதிகம் வசூலித்த இந்திய படங்களின் வரிசையில் 2-ம் இடத்தைப் பிடித்திருந்த ‘பாகுபலி 2’ வசூலான ரூ.1,810 கோடியை நெருங்குகிறது.
வளைகுடா நாடுகள் மற்றும் சீனாவில் ‘துரந்தர் 2’ வெளியாகாத நிலையிலும் இவ்வளவு வசூலை இப்படம் பெற்றிருப்பது சாதனை என்கிறார்கள்.
உலக அளவில் அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்பட வரிசையில் ‘துரந்தர் 2’ இப்போது 3-ம் இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆமிர்கானின் ‘தங்கல்’ படம், உலக அளவில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூலித்து முதலிடத்தில் இருக்கிறது.