பாலிவுட்

‘ஹோம்பவுண்ட்’ பட சர்ச்சை: தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

செய்திப்பிரிவு

இந்​தியா சார்​பில் ஆஸ்​கருக்கு அனுப்​பப்​பட்​டுள்ள ‘ஹோம்​பவுண்ட்’ படத்தை நீரஜ் கேவான் இயக்​கி​யுள்​ளார். கரண் ஜோஹரின் தர்மா புரொடக் ஷன்ஸ் தயாரித்​துள்ள இப்ப​டத்​தில் ஜான்வி கபூர், இஷான் கட்​டார், விஷால் ஜெத்வா உள்பட பலர் நடித்​துள்​ளனர். இந்​தப் படம் தனது நாவலைக் காப்​பியடித்து உரு​வாக்​கப்​பட்​டது என்று பத்​திரி​கை​யாள​ரும் எழுத்​தாள​ரு​மான பூஜா சாங்​கோய்​வாலா என்​பவர் தர்மா புரொடக் ஷன்ஸ் மற்​றும் நெட்​பிளிக்ஸ் நிறு​வனத்​துக்கு நோட்​டீஸ் அனுப்பி இருந்​தார்.

2021-ம் ஆண்டு தான் எழு​திய இதே பெயரிலான நாவலை அடிப்​படை​யாகக் கொண்டு இப்​படம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது என்​றும் எனது நாவலின் காட்​சிகள், உரை​யாடல், கதை அமைப்பு உள்​ளிட்ட பல சம்​பவங்​களை அப்​படியே எடுத்​திருப்​ப​தாக​வும் அவர் கூறி​யிருந்​தார்.

இந்​நிலை​யில், கரண் ஜோஹரின் தர்மா புரொடக் ஷன்ஸ் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “ஹோம்​பவுண்ட் திரைப்​படம் பஷாரத் பீரின் நியூ​யார்க் டைம்ஸ் கட்​டுரையை மைய​மாக கொண்டே உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. அதி​காரப்​பூர்​வ​மாக உரிமம் பெற்று தயா​ரான படம் அது. அதற்​கான அனைத்து உரிமை​களும் சட்​டப்​பூர்​வ​மாகப் பெறப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக வந்​திருக்​கும் நோட்​டீஸுக்​கு, தர்மா புரொடக்​ ஷன்​ஸின்​ சட்​டக்​ குழு முறை​யாகப்​ பதிலளித்​துள்​ளது” என்​று தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT