ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான பாலிவுட் படம் ‘துரந்தர்’. இதில், சஞ்சய் தத், மாதவன், அக் ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆதித்யா தார் இயக்கி உள்ளார்.
‘ஸ்பை த்ரில்லர்’ படமான இது ரூ.1,300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படம் என்ற சிறப்பையும் பெற்றது. இதன் 2-ம் பாகம் இப்போது உருவாகியுள்ளது. இதன் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், ஜஸ்கிரத் சிங்ரங்கி என்ற கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் மிரட்டலாகத் திரும்பியுள்ளார்.
ஜஸ்கிரத் மற்றும் ஹம்ஸா என 2 அவதாரங்களில் அவர் காட்டும் ஆக்ரோஷம் டிரெய்லரில் அதிர வைக்கிறது. ஜியோ ஸ்டூடியோஸ் வழங்கும், பி62 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள ‘துரந்தர் -ரிவெஞ்ச்’ என்ற இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் மார்ச் 19-ல் வெளியாகிறது.