பாலிவுட்

ஷாருக்கானின் ‘கிங்’ படத்தில் இருந்து அனிருத் விலகல்!

நிலா

ஷாருக்​கான் நடித்​துள்ள திரைப்​படம் ‘கிங்’. இதை சித்​தார்த் ஆனந்த் இயக்​கி​யுள்​ளார். ‘பதான்’ படத்​தின் சூப்​பர் ஹிட் வெற்​றியைத் தொடர்ந்து இரு​வரும் மீண்​டும் இணைந்​துள்​ளனர். இதில் அனில் கபூர், ராணி முகர்ஜி, தீபிகா படுகோன், சுஹானா கான், அபிஷேக் பச்​சன் உள்​பட பலர் நடித்​துள்​ளனர். கரீனா கபூர் சிறப்​புத் தோற்​றத்​தில் நடித்​துள்​ளார்.

‘கொலை​யாளி அல்ல; நான் காதலன்!’ என்ற வாசகத்​துடன் வெளியான இப்​படத்​தின் போஸ்​டர் சமீபத்​தில் வெளியாகி வரவேற்​பைப் பெற்​றது.

பிரம்​மாண்​ட​மான பட்​ஜெட்​டில் ஆக் ஷன் த்​ரில்​லராக உரு​வாகி​யுள்ள இந்​தப்​படத்தை ரெட் சில்​லீஸ் என்​டர்​டெய்ன்​மென்ட் மற்​றும் மார்ஃபிளிக்ஸ் பிக்​சர்ஸ் சார்​பில் கவுரி கான், சித்​தார்த் ஆனந்த் மற்​றும் மம்தா ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரித்​துள்​ளனர்.

டிச. 24-ல் வெளியாக இருக்​கும் இப்​படத்​துக்கு அனிருத் மற்​றும் சச்​சின் - ஜிகர் இணைந்து இசையமைப்​ப​தாக அறி​விக்​கப்​பட்டு இருந்​தது. இந்​நிலை​யில் திரு​மணம் காரண​மாக இப்​படத்​தில் இருந்து அனிருத் வில​கி​யுள்​ளார். இரு தரப்​பினரும் பேசி, சுமுக​மாகப் பிரிந்து கொள்ள முடிவெடுத்​த​தாகக் கூறப்​படு​கிறது. இப்​படத்​துக்​காக அவர் ஏற்​கெனவே அமைத்​திருந்த தீம் மியூசிக்கை, ஷாருக்​கானுக்கு பரிசாக வழங்​கி​யுள்​ளார். இதையடுத்து சச்​சின் - ஜிகர் இப்​படத்​தின் இசைக்​குப் பொறுப்​பேற்​றுள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT