நடிகை ரிது வர்மா
கோபி சந்த், ரிது வர்மா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட வரலாற்றுத் திரைப்படம் ‘பாரத வர்ஷா’.
சங்கல்ப் ரெட்டி இயக்கும் இந்த பான் இந்தியா படத்தை, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். பவன் குமார் வழங்குகிறார். படத்தின் முதல் பாடலான ‘வீர ஜெயதீரா’ வெளியிடப்பட்டுள்ளது.
அனுதீப் தேவ் இசையமைத்துள்ளார். சவுந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்திய வரலாற்றில் அதிகம் பேசப்படாத முக்கியமான அத்தியாயத்தை இப்படம் பேசும் என்கிறது படக்குழு.