நடிகை காஜல் அகர்​வால்

 
பாலிவுட்

“என் தோற்​றம் குறித்து விமர்சனங்களை எதிர்கொண்டேன்” - காஜல் அகர்வால் வருத்​தம்

நிலா

தனது ஆரம்​ப​ கால சினிமா பயணத்​தில், உடல் தோற்​றம் குறித்து கடுமை​யான விமர்​சனங்​களை எதிர்​கொண்​டேன் என்று நடிகை காஜல் அகர்​வால் தெரி​வித்​துள்​ளார். இவர் ஸ்ரேயஸ் தல்​படே-வுடன் தற்​போது நடித்​துள்ள ‘தி இந்​தியா ஸ்டோரி’ திரைப்​படம் ஜூலை 24-ல் திரையரங்​கு​களில் வெளி​யாக இருக்​கிறது.

இதன் புரமோஷனில் கலந்து கொண்ட காஜல் அகர்​வால் கூறும்போது, “நான் சினி​மாவுக்கு வந்த காலத்​தில் சமூக வலைதளங்​கள் இல்​லை. ‘ஏர்​போர்ட் லுக்’ முதல் ஒவ்​வொரு பொது நிகழ்ச்​சி​யிலும் எப்​படி இருக்​கிறோம் என்று யாரும் ஆராய்ந்து பார்க்​க​வில்​லை. அதனால் சுதந்​திர​மாக, இயல்​பாக இருக்க முடிந்தது. பயணத்​தின் ​போது எப்​போதும் முழு மேக்​கப்​புடன் இருக்க வேண்​டிய அவசி​ய​மும் இல்​லை. அப்​போது விமர்​சனங்​கள் இல்​லை​யா? என்​றால் இருந்​தன.

ஆனால் அவை பெரும்​பாலும் இயக்​குநர்​களிடம் இருந்து வந்​தன. ‘கொஞ்​சம் குண்​டாக இருங்​கள்’, ‘இன்​னும் ஒல்​லி​யாக மாறுங்​கள்’ என்று சொல்​வார்​கள். அந்த அழுத்​தம் இருந்​தது. ஆனால் இப்போது இருப்​ப​தைப் போலக் கொடூர​மாக இல்​லை. தற்​போது அழகுக்​கான தரநிலைகள் இரக்​கமற்​ற​தாக மாறி​விட்​டன. இன்றைய இளம் நடிகைகள் பற்றி எனக்கு உண்​மை​யிலேயே வருத்​த​மாக இருக்​கிறது.

அவர்​கள் தங்​களின் தனித்​தன்​மை​யை​யும் தன்னம்பிக்கையையும் காத்​துக்​கொள்​வார்​கள் என்று நம்புகிறேன். எல்​லா​வற்​றுக்​கும் தலை​யாட்​டு​வதை விட, தேவையான இடத்​தில் ‘இல்​லை’ என்று சொல்​லக் கற்றுக்கொள்வது மிக​வும் முக்​கி​யம். வாய்ப்பு கிடைத்​தால் மகிழ்ச்சி; இல்லை என்​றாலும் அதற்​காக என்னை மாற்றிக்கொள்ள வேண்​டிய​தில்லை என்ற தெளிவு எனக்கு இருந்தது” என்று தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT