பாலிவுட்

வித்தியாசமான சூப்​பர் ஹீரோ கதை​யில் தென்​னிந்​திய பெண்ணாக அடா சர்மா

ப்ரியா

தமிழில் சிம்​பு​வின் ‘இது நம்ம ஆளு’ படத்​தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்​தவர், அடா சர்​மா. தொடர்ந்​து, ‘சார்லி சாப்​ளின் 2’ படத்தில் நடித்​திருந்​தார். ‘தி கேரளா ஸ்டோரி’ படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபல​மான இவர், இப்​போது சூப்​பர் ஹீரோ படத்​தில் நடித்​துள்​ளார்.

மற்ற சூப்​பர் ஹீரோக்​களைப் போல் இல்​லாமல், அவரது கதாபாத்திரம் கொஞ்​சம் சோம்​பேறித்​தன​மான சூப்​பர் ஹீரோவாக வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. ‘அக்​ரோ​மாடோப்​சி​யா’ என்ற நோயால் பாதிக்​கப்​பட்​டிருக்​கும் அந்த நிறக்​ குருடு கதா​பாத்திரத்​துக்கு உலகம் கருப்​பு, வெள்​ளை​யாக மட்​டுமே தெரி​யும். பொறுப்​பு​களை விட ஓய்​வெடுக்​க​வும், தூங்​க​வும் விரும்​பும் இந்த சூப்​பர் ஹீரோ கதையை ராஜேஷ் பச்​சானி இயக்​கி​யுள்​ளார்.

இப்​படத்​தின் டைட்​டில் டீஸர் நேற்று வெளி​யிடப்​பட்​டது. படத்துக்கு ‘சூப்​பர் வெள்​ளி’ என்று டைட்​டில் வைத்​துள்​ளனர். இதில் அடா சர்​மா, வெள்ளி விஜிலட்​சுமி கிருஷ்ண​மூர்த்தி சந்திரசேகரன் சுவாமி ஐயர் என்ற கதா​பாத்​திரத்​தில் தென்னிந்திய பெண்​ணாக நடிக்​கிறார்​.

          
SCROLL FOR NEXT