பாலிவுட்

“ராமாயணம் முதல் பாகத்தில் எனக்கும் ரன்பீர் கபூருக்கும் நேரடி காட்சிகள் இல்லை” - யாஷ் தகவல்

நிலா

இந்தி திரைப்பட இயக்​குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையை படமாக்கி இருக்​கிறார். இதில் ரன்​பீர் கபூர் ராம​ராக​வும் சாய் பல்​லவி சீதை​யாக​வும் ராவண​னாக யாஷும் நடித்​துள்​ளனர். மேலும் அனு​ம​னாக சன்னி தியோல், லட்​சுமண​னாக ரவி துபே என பலர் நடித்​துள்​ளனர்.

ஆங்​கிலம், இந்​தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்​வேறு மொழிகளில் இந்​தப் படம் 2 பாக​மாக உரு​வாகி இருக்கிறது. பிரைம் ஃபோகஸ் ஸ்டூடியோஸ் சார்​பில் நமித் மல்​ஹோத்ரா தயாரித்​துள்​ளார். இதன் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்​கும் 2-வது பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்​கும் வெளி​யாக இருக்​கிறது. இந்நிலையில் இப்​படத்​தின் புரமோஷன் நிகழ்ச்சி அமெரிக்காவில் நடை​பெறும் `சினி​மா​கான் 26' விழா​வில் நடைபெற்​றது.

அதில் கலந்​து​கொண்ட நடிகர் யாஷ் ‘ரா​மாயணம்’ படம் பற்றி கூறும்​போது, “இப்​படத்​தின் முதல் பாகத்​தில் ராம​ராக நடிக்​கும் ரன்​பீர் கபூருக்​கும், ராவண​னாக நடிக்​கும் எனக்​கும் காட்​சிகள் இருக்​காது. இது 2 பாகங்​களாக உரு​வாகும் படம் என்​ப​தால், முதல் பாகத்​தில் ராவண​னாக எனக்கு ஒரு தனி ராஜ்ஜிய​மும், ராமருக்குத் தனி ராஜ்ஜிய​மும் உள்​ளது.

ரன்​பீர் கபூர் மிகச் சிறந்த நடிகர். இரு​வரின் நேரடி மோதல் 2-ம் பாகத்​தில் மட்​டுமே இடம்​பெறும். ‘ரா​மாயணம்’ போன்ற லட்​சி​ய​மான மற்​றும் அசாதாரணமான ஒன்​றைச் செய்ய முற்​படும்​போது, எங்​கள் அனை​வருக்​கும் ஒரே குறிக்​கோள்​தான், அது எங்​களால் முடிந்த சிறந்​ததைக் கொடுப்​பது.

எங்​களின் சிந்​தனை ஒரே மாதிரி​யாக உள்​ளது. அதனால் எங்களுக்​குள் எந்​தத் தயக்​க​மும் இல்​லை. இந்​தப் படம் நன்மைக்கும் தீமைக்​கும் இடையி​லான ஒரு கதை மட்​டுமல்ல. நாம் இந்​தக் கதைகளைக் கேட்டு வளர்ந்​தவர்​கள். இது நமது கலாச்​சா​ரத்​தின் ஒரு பகு​தி. ஒவ்​வொரு கதா​பாத்​திரத்​துக்​கும் ஒரு நியா​யம் இருக்​கும். தான் செய்​வதைச் சரி என்று நம்​பும் பலமிக்க ஆளு​மை​யாக ராவணன் சித்​தரிக்​கப்​பட்​டுள்​ளார்” என்​றார்.

தான் நடித்​துள்ள ‘டாக்​ஸிக்’ படம் பற்றி பேசிய அவர், “இந்​தப் படத்தை முதன்​முறை​யாக ஆங்​கிலத்​தி​லும் எடுத்​துள்ளோம். இது சாதாரண கேங்​ஸ்​டர் ஆக் ஷன் படம் அல்ல. வெளிப்​படை​யாகப் பார்த்​தால் இது அப்படித் தோன்​றும். ஆனால் ஆழமான சைக்​கலாஜிகல் அம்​சங்​களும், மனித வாழ்க்​கை​யின்​ சுவாரஸ்​ய​மான கோணங்​களும்​ உள்​ளன” என்​று கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT