சல்​மான் கான்

 
பாலிவுட்

‘காலா ஹிரன்’ படத்​துக்கு எதிராக சல்​மான் கான் தொடர்ந்த வழக்​கில் தயாரிப்பாளர், இயக்குநருக்கு நோட்டீஸ்

நிலா

நடிகர் சல்​மான் கான், கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்​தான் மாநிலம் ஜோத்​பூரில் 2 அரிய வகை மான்​களை வேட்டையாடியதாகத் தொடரப்​பட்ட வழக்​கில் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்​கப்​பட்​டது. இதற்கு எதி​ராக மேல்​முறை​யீடு செய்யப்பட்டு வழக்கு நிலு​வை​யில் உள்​ளது. சர்ச்​சைக்​குரிய இச்சம்பவத்தின் பின்​னணி​யில் ‘காலா ஹிரன்’ என்ற பெயரில் திரைப்​படம் உரு​வாகிறது.

இதன் அதி​காரப்​பூர்வ ஃபர்​ஸ்ட் லுக் போஸ்​டர் சமீபத்​தில் வெளியிடப்​பட்​டது. இந்​நிலை​யில் இப்​படத்​தின் தயாரிப்பு மற்​றும் விளம்​பரப் பணி​களை உடனடி​யாக நிறுத்​து​மாறு சல்​மான் கான் தரப்​பில் டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடரப்​பட்​டது.

சல்​மான் கான் சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர் நிஜாம் பாஷா, “கடந்த மே 29 அன்று படக்​குழு​ வெளி​யிட்ட விளம்பர போஸ்​டரில், ஒரு கதா​பாத்​திரம், அச்சு அசலாக சல்​மான் கானை பிரதிபலிக்கும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. அவருடைய அடை​யாள​மாகக் கருதப்​படும் பிரேஸ்​லெட்டை அணிந்​திருப்​பது போல​வும் காட்​டப்​பட்​டுள்​ளது.

இது,சல்​மான் கானின் தனித்​துவ உரிமை​களைப் பாது​காத்​து, டெல்லி உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை நேரடி​யாக மீறும் செய​லாகும்” என்று வாதிட்​டார். மேலும் சல்​மான் கானின் அடையாளத்​தைப் பயன்​படுத்தி வணிக ரீதி​யாக லாபம் ஈட்ட முயல்​கின்றனர் என்​றும் குற்​றம் சாட்​டி​னார்.

வழக்கை விசா​ரித்த நீதிபதி நீனா பன்​சால் கிருஷ்ணா, படத்​தின் தயாரிப்​பாளர் அமித் ஜானி, இயக்​குநர் பாரத் ஸ்ரீநாத், காஸ்​டிங் இயக்​குநர் அக் ஷய் பாண்டே மற்​றும் இப்​படம் தொடர்புடையவர்களுக்கு நோட்​டீஸ் அனுப்ப உத்​தர​விட்​டார். மேலும், இவ்​வழக்​கின் அடுத்​தக் கட்ட விசா​ரணையை ஜூன் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT