பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங். அவர் நடித்து வெளியான ‘துரந்தர்’ ரூ.1,300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இப்படத்தின் அடுத்த பாகம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், அவரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ரன்வீர் சிங்கின் வாட்ஸ்ஆப் எண்ணில், கோடிக்கணக்கான ரூபாய் வேண்டும் என்று கேட்டு, மர்மநபர் ஒருவர் வாய்ஸ் மெசேஜ் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மும்பை போலீஸாரிடம் அவர் புகார் அளித்தார். அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மிரட்டலை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரன்வீர் சிங்கின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. தனியார் பாதுகாவலர்களும் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே நடிகர் சல்மான் கானுக்கு, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது. அதேபோல், பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் வீட்டுக்கு வெளியே லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், சில நாட்களுக்கு முன் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.