பாலிவுட்

‘த்ரிஷ்யம் 3’-ல் இருந்து திடீரென விலகுவதா? - இந்தி நடிகர் மீது தயாரிப்பாளர் வழக்கு

செய்திப்பிரிவு

அஜய் தேவ்கன், ஸ்ரேயா நடித்து இந்தியில் வெற்றிபெற்ற த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2 படங்களுக்குப் பிறகு அதன் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் முக்கிய வேடத்தில் அக்‌ஷய் கன்னா ஒப்பந்தமாகி இருந்தார்.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் திடீரென விலகினார். இதையடுத்து ‘த பேமிலிமேன் 3’ வெப்தொடர் மற்றும் பல இந்திப் படங்களில் நடித்துள்ள ஜெய்தீப் அலாவத், அவருக்கு பதில் நடிக்கிறார்.

இந்​நிலை​யில் இப்​படத்​தின் தயாரிப்​பாளர் குமார் மங்​கத் பதக் கூறும்​போது, “படம் பற்றி விரி​வான பேச்​சு​வார்த்​தைக்கு பிறகு​தான் அக்‌ஷய் கன்னா ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டார். படப்​பிடிப்பு தொடங்​கு​வதற்கு பத்து நாட்​களுக்கு முன்பு திடீரென வில​கிக்​கொண்​டார். அவர் தொழில்​முறை நடிக​ராக நடந்​து​கொள்​ள​வில்​லை. அவரது நடத்தை முறையற்​றது. இதனால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருக்​கிறோம்” என்​றார்.

ரன்​பீர் கபூர் நடித்து வெற்​றி​பெற்​றுள்ள ‘துரந்​தர்’ படத்​தில் அக்‌ஷய் கன்​னா​வின் நடிப்பு பேசப்​பட்​டுள்​ளது. அந்த வெற்றி காரண​மாக இப்​படத்​தில் இருந்து அவர் வில​கி​யுள்​ள​தாகக் கூறி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT