சோனாக்‌ஷி சின்ஹா 
பாலிவுட்

புது வீட்டில் குடியேறினார்: சோனாக்‌ஷி சின்ஹா

செய்திப்பிரிவு

பிரபல இந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. இவர் தமிழில் ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் நடித்துள்ளார். இவர் தனது தந்தையும் நடிகருமான சத்ருஹன் சின்ஹா மற்றும் அம்மா பூனம் சின்ஹாவுடன் மும்பை ஜூஹுவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் பாந்த்ராவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நான்கு படுக்கையறை வசதி கொண்ட புதிய வீட்டை வாங்கியிருந்தார். இப்போது அங்கு குடியேறி இருக்கிறார்.

புதிய வீட்டின் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT