‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் ஆமிர்கான் பங்காற்றியதாக படத்தின் இயக்குநர் அத்வைத் சந்தன் கூறியுள்ளார்.
ஆமிர்கான் தயாரித்து சிறிய வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பங்காற்ற, தக்ஸ் ஆஃப் ஹிந்தொஸ்தான் படத்திலிருந்து சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு ஆமிர்கான் வந்தார் என இயக்குநர் அத்வைத் கூறியுள்ளார்.
"இது எனது முதல்படம். அதனால் மிக மிக பதட்டமாக, பரபரப்பாக இருந்தது. ஆனால் நல்லவேளை. ஆமிர் அவர்கள் அந்தப் படத்திலிருந்து இடைவேளை எடுத்துக் கொண்டு வந்து எனக்கு உதவினார்.
படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் கலர் கரெக்ஷன் ஆகியவற்றை பார்த்து ஒப்புதல் தந்தார். இறுதிக்கட்ட ஒலிக்கலவையை மேற்பார்வை செய்தார். விளம்பர வேலைகளுக்கு முன் படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி வடிவத்தை பார்க்க வேண்டும் என்று சொன்னார். படத்தின் முழு வடிவத்தைப் பார்த்து அவர் ஒப்புதல் தந்ததும் நான் நிம்மதியாக உறங்குகிறேன்." என இயக்குநர் அத்வைத் கூறியுள்ளார்.
‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’ அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது