'ஜவான்' படத்தில் ஷாருக்கான் 
பாலிவுட்

'ஜவான்' ரிலீஸ் தேதி மாற்றம்?

செய்திப்பிரிவு

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம், 'ஜவான்'. விஜய் சேதுபதி, நயன்தாரா உட்பட பலர் நடிக்கின்றனர். தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்த ‘ஒரு கைதியின் டைரி’ இன்ஸ்பிரேஷனில் இந்தப் படம் உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் ஜூன் 2-ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பட வேலைகள் முடியாததால், ஜூன் 29-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT