'நியூட்டன்' படம் அடுத்தாண்டு ஆஸ்கரில் நுழைய உள்ள அதிகாரபூர்வப் படமாக இருக்கும் என்று இந்திய திரைப்பட கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அமித் மசூர்கார் இயக்கியுள்ள 'நியூட்டன்' திரைப்படத்தில், ராஜ்குமார் ராவ், பங்கஜ் த்ரிபாதி, ரகுவீர் யாதவ் மற்றும் அஞ்சலி பாட்டீல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சட்டீஸ்கரின் மோதல் நிறைந்த காடுகளில் நேர்மையாகத் தேர்தல் நடத்த முயலும் தேர்தல் அதிகாரி நியூட்டன் குமாரின் போராட்டத்தைப் பற்றிப் பேசும் படம் 'நியூட்டன்'.
இப்படம் ஆஸ்கரில் நுழைவது குறித்து ராஜ்குமார் ராவ் மற்றும் த்ரிபாதி உள்ளிட்ட நடிகர்களும் தயாரிப்பு நிறுவனமும் ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இயக்குநர் மசூர்கார் பேசும்போது, 'இது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. படம் இன்று வெளியாவது மகிழ்ச்சியை அதிகப்படுத்துகிறது. இதன்மூலம் மக்கள் எங்கள் படத்துக்கு அதிக ஆதரவு அளிப்பர் என்று நம்புகிறோம்' என்றார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் வரும் மார்ச் 4, 2018-ம் ஆண்டில் அடுத்த ஆஸ்கர் விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.