நடிகை ஆர்த்தி மிட்டல் 
பாலிவுட்

இந்தி நடிகை திடீர் கைது!

செய்திப்பிரிவு

இந்தி நடிகை ஆர்த்தி மிட்டல், ‘பரசுராம்’ உட்பட சில டிவி தொடர்களில் நடித்துள்ளார். மாதவன் நடிக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். காஸ்டிங் இயக்குநராகவும் இருக்கும் இவர், பாலியல் தொழிலில் மாடல்களை ஈடுபடுத்தி வருவதாக மும்பை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அவரைக் கண்காணித்தனர். அவர், குர்கான் பகுதியில் பாலியல் தொழிலில் மாடல்களை ஈடுபடுத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், 2 மாடல்களை அவரிடம் இருந்து மீட்டுள்ளனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT