பிரபல இந்தி நடிகை ஹூமா குரேஷி. தமிழில் ரஜினியின் ‘காலா’, அஜித்தின் ‘வலிமை’ படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணத்துக்கு அவசரப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நான் சரியான நபருக்காகக் காத்திருக்கிறேன். அவரைச் சந்தித்தால், அவர் எனக்கு சரியானவர் என உணர்ந்தால் திருமணம் செய்துகொள்வேன். இந்தி திரைத்துறையில் இருப்பவர்கள் தொடர்ந்து திருமணம் செய்து வருவதால் நானும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்தக் கேள்வியைத் தொடர்ந்து எதிர்கொள்கிறேன். திருமணம் தொடர்பாக எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. என் வாழ்க்கையின் சில விஷயங்களைத் தனிப்பட்ட முறையில் வைத்திருக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.