பாலிவுட்

“‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு என்னால் தான் ஆஸ்கர் கிடைத்தது” - அஜய் தேவ்கன் ஜாலி பதில்

செய்திப்பிரிவு

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு என்னால் தான் ஆஸ்கர் விருது கிடைத்தது” என பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஜாலியாக தெரிவித்துள்ளார்.

தமிழில் வெளியான ‘கைதி’ படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகியுள்ளது ‘போலா’ (Bhola) திரைப்படம். இப்படத்தை இயக்கியுள்ள அஜய் தேவ்கன் பட ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம், “நீங்கள் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்த ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் கிடைத்துள்ளது” என கூற, அதற்கு பதிலளிக்கும் அஜய் தேவ்கன், “சொல்லப்போனால் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு என்னால் தான் ஆஸ்கர் கிடைத்தது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “யோசித்துப்பாருங்கள். ஒருவேளை நான் அந்தப்பாடலில் நடனமாடியிருந்தால் என்ன ஆயிருக்கும்?” என ஜாலியாக பேசியுள்ளார். கடந்தாண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் அஜய் தேவ்கன், ஆலியாபட் ஆகியோர் நடித்திருந்தத்து குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT