பாலிவுட்

விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் ஷாருக்கான்

ஸ்கிரீனன்

'விக்ரம் வேதா' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து தயாரிக்க ஷாருக்கான் முடிவு செய்திருக்கிறார்.

தமிழில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'விக்ரம் வேதா'. இதன் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பெரும் போட்டி நிலவி வந்தது.

இப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிப்பது உறுதியாகியுள்ளது. அவருடைய தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் 'விக்ரம் வேதா' ரீமேக் உரிமையைக் கைப்பற்ற தயாரிப்பாளர் சசிகாந்த்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் மாதவன் கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிப்பார் என்று தெரிகிறது.

விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் யார் நடிக்கவுள்ளார், இயக்குநர் யார் உள்ளிட்ட எந்தவொரு தகவலும் இன்னும் உறுதியாகவில்லை. விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் எனத் தெரிகிறது. 'விக்ரம் வேதா' படத்தின் ட்ரெய்லரை ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.

தற்போது ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வரும் ஷாருக்கான், அப்படத்திற்கு இடையே 'விக்ரம் வேதா' ரீமேக்கிலும் நடிப்பார் என தெரிகிறது.

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலெட்சுமி சரத்குமார், ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சாம் இசையமைத்த இப்படத்துக்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்தார். சஷிகாந்த் தயாரித்திருந்தார்

SCROLL FOR NEXT