பாலிவுட்

அல்லு அர்ஜுன் மறுப்பு - ராம் சரணை நாடிய அட்லீ

செய்திப்பிரிவு

இயக்குநர் அட்லீ, ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இதை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அவர் மறுத்ததை அடுத்து, அல்லு அர்ஜுனிடம் இயக்குநர் அட்லீ பேசினார். அவரும் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இயக்குநர் அட்லி, ராம்சரணிடம் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள ராம் சரண், இதில் நடிப்பது குறித்த முடிவை இன்னும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT