பாலிவுட்

கொரியா ஓபன் சீரிஸ் வெற்றி; இனிமையான பழிவாங்கல்- சிந்துவுக்கு அமிதாப் வாழ்த்து

ஐஏஎன்எஸ்

கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடரில் வெற்றி பெற்ற சிந்துவுக்கு அமிதாப் பச்சன், தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கொரியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, தன் அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.

உலக சாம்பியன்ஷிப் இறுதியில் நோசோமியிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்த 22 வயது சிந்து, கொரிய ஓபனில் சாம்பியன் பட்டம் பெற்ற முதல் இந்தியர் ஆவார்.

இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமிதாப், ''ஆம், அவர் நடத்தி முடித்து விட்டார். கொரியாவில் நடைபெற்ற சூப்பர் சீரிஸ் தொடரில் சிந்து வெற்றி பெற்றுள்ளார். இந்தியரின் முதல் வெற்றி. இனிமையான பழிவாங்கலும் கூட!'' என்று கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றதை அடுத்து, மற்றொரு பதிவில் ''வெற்றிகரமான விளையாட்டின் ஒரு நாள்! ... ஜெய் ஹிந்த்!'' என்றும் அமிதாப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT