பாலிவுட்

புகைப்படம் தொடர்பாக ரசிகரின் கேள்விக்கு தாப்சியின் சாட்டையடி பதில்

ஸ்கிரீனன்

தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் தொடர்பாக ரசிகரின் கேள்விக்கு, தாப்சி சாட்டையடி பதிலளித்துள்ளார்.

டேவிட்  தவான் இயக்கத்தில் வருன் தவான், ஜாக்லீன், தாப்சி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ஜுட்வா 2'. செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்த இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு படக்குழு சென்று வருகிறது.

இப்படத்தில் பிகினி உடையணிந்து நடித்த புகைப்படத்தை தாப்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "எதிர்நீச்சல் போடும்போது நீங்கள் தான் உங்களுக்காக எழுந்து நின்று போராட வேண்டும். ஆனால் சிரிக்க மறக்காதீர்கள்" என்று பதிவிட்டார்.

அதற்கு எதிர்வினையாக "நமது நாட்டில் கருத்து சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் ஏன் மிச்சம் இருக்கும் ஆடைகளையும் நீக்கலாமே. உங்கள் சகோதரர் இதைப் பார்த்த பின்பு பெருமைப்பட்டிருப்பார்" என்று தாப்சி ட்விட்டர் பதிவை குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார்.

அவருக்கு பதிலாக, "மன்னித்துவிடுங்கள். எனக்கு சகோதரன் இல்லை. இல்லையென்றால் அவரிடம் கேட்டு உங்களிடம் சொல்லிருப்பேன். ஆனால் இப்போதைக்கு, ஒரு சகோதரியின் பதில் போதும்தானே?" என்று பதிலளித்துள்ளார் தாப்சி. இப்பதிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT