பாலிவுட்

படப்பிடிப்பில் விபத்து அமிதாப்பச்சன் காயம்

செய்திப்பிரிவு

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன் ,தீபிகா படுகோன் நடிக்கும் படம் ‘புராஜெக்ட் கே’. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த பான் இந்தியா படத்தை அஸ்வினி தத் தயாரிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. இதில் அமிதாப் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சியின் படப்பிடிப்பு நடந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.

இதில் அமிதாப்பச்சன் காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு வலது விலா எலும்பு முறிவும் தசை கிழிந்திருப்பதும் பரிசோதனையில் தெரியவந்தது.

சிகிச்சைக்குப் பின் மும்பை திரும்பிய அவர், மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வெடுத்து வருகிறார்.

SCROLL FOR NEXT