பாலிவுட்

நார்வே திரைப்பட விழாவில் திரையிடப்படும் இந்து சர்க்கார்

ஐஏஎன்எஸ்

இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பாலிவுட் திரைப்படமான 'இந்து சர்க்கார்' நார்வே திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

விழாவை முன்னிட்டு ஓஸ்லோ செல்லும் புகைப்படத்தை பட இயக்குநர் பண்டார்கர் வியாழக்கிழமை இரவு பகிர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ''நார்வேயில் செப்டம்பர் 8-ம் தேதி நடைபெறும் பாலிவுட் ஃபெஸ்டிவலுக்காக ஓஸ்லோ செல்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

'பேஜ் 3', 'டிராஃபிக் சிக்னல்', 'ஃபேஷன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் மதூர் பண்டார்கர் இயக்கத்தில் உருவான படம் 'இந்து சர்க்கார்'.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் 1975- 1977ம் ஆண்டு காலத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் 'இந்து சர்க்கார்'. இந்த திரைப்பட வெளியீட்டுக்கு காங்கிரஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் சிபிஎஃப்சி குழுவினர் படத்தில் 12 காட்சிகளை நீக்கப் பரிந்துரைத்தனர். அத்துடன் ஆர்எஸ்எஸ், அகாலி உள்ளிட்ட வார்த்தைகளையும் நீக்கக் கூறியிருந்தனர்.

இந்து சர்க்காராக, கீர்த்தி குல்ஹாரி, நவீன் சர்க்காராக தோத்தா ரே சவுத்ரி, சஞ்சய் காந்தியாக நீல் நிதின் முகேஷ், அனுபம் கெர், சுப்ரியா வினோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

SCROLL FOR NEXT