இந்திய திகில், பேய் படங்களில் நம்பகத்தன்மை அதிகமாக இருக்க வேண்டும் என்றும். அற்ப விஷயங்கள் கைவிடப்பட வேண்டும் என்றும் பிரபல பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் கூறியுள்ளார்.
'ராஸ்', '1920', 'ஹாண்டட்' உள்ளிட்ட திகில் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் விக்ரம் பட். மேலும் அவர் இதுகுறித்து பேசுகையில், "நான் ஸ்டீபன் கிங்கின் ரசிகன். அவரது சிறுகதைகள் முதல், நாவல்கள் வரை அனைத்தும் படித்துள்ளேன்.
இந்தியாவில் திகில் படங்களின் எதிர்காலம் ரசிகர்களை மீண்டும் ஈர்ப்பதைப் பொறுத்தே இருக்கிறது. அப்படியென்றால் திகில் படங்களின் நம்பகத்தன்மை அதிகமாக இருக்க வேண்டும், அற்ப விஷயங்கள் கைவிடப்பட வேண்டும்" என்றார்.