பாலிவுட்

Oscars 2023: ஆஸ்கர் விருதை வழங்கும் தீபிகா படுகோன்

செய்திப்பிரிவு

பதான் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளதை அடுத்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மகிழ்ச்சியில் உள்ளார். இந்நிலையில் அவருக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக மற்றுமொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அது 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் விருது வழங்கும் பிரபலங்களில் தீபிகா படுகோனும் ஒருவர்.

95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வரும் மார்ச் 12ல் மிகப்பிரமாண்டமாக நடக்கவுள்ளது. இதில், விருது வழங்குபவர்களின் பட்டியலை ஆஸ்கர் அகாடமி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில், டுவைன் ராக் ஜான்சன், அவதார் பட நடிகை ஜோ சல்டானா மற்றும் ஹாலிவுட் பிரபலங்களான ரிஸ் அகமத், எமிலி பிளன்ட், சாமுவேல் எல். ஜாக்சன், டோனி யென் உள்ளிட்ட உலக சினிமா பிரபலங்கள் பெயர் இடம்பெற்றுள்ளது.

இதில் இந்தியா சார்பில், தீபிகா படுகோன் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை தீபிகா படுகோனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது.

SCROLL FOR NEXT