பாலிவுட்

ஷ்ரத்தா கபூருக்கு பயிற்சியளிக்கும் சாய்னா, கோபிசந்த்

ஐஏஎன்எஸ்

சாய்னா நேவால் வாழ்க்கை வரலாறை சொல்லும் படத்தில், சாய்னா நேவால் வேடத்தில் நடிக்கும் ஷ்ரத்தா கபூருக்கு, சாய்னா மற்றும் அவரது பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர் பயிற்சி தருகின்றனர்.

இந்த அனுபவம் அற்புதமாக இருப்பதாக ஷ்ரத்தா தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மூவரும் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ள ஷ்ரத்தா கபூர், "இன்று, சாம்பியனுடன் பயிற்சி மேற்கொள்ளவிருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சாய்னாவுடன் ஒரு புகைப்படமும், பேட்மிண்டன் அரங்கில் பயிற்சி எடுக்கும் இன்னொரு புகைப்படமும் பகிரப்பட்டுள்ளது.

சாய்னா நேவாலும் இந்தப் பயிற்சி குறித்து தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாய்னா படத்தை அமோல் குப்தே இயக்குகிறார்.

SCROLL FOR NEXT