பாலிவுட்

கைதி இந்தி ரீமேக்கில் ராய் லட்சுமி நடனம்

செய்திப்பிரிவு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2019ம் ஆண்டு வெளியான படம், ‘கைதி’. ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.

கார்த்தி நடித்த வேடத்தில் அஜய்தேவ்கன் நடிக்கிறார். படத்தை அவரே இயக்குகிறார். தபு போலீஸ் அதிகாரியாகவும் அமலா பால், அஜய் தேவ்கன் மனைவியாகவும் நடிக்கின்றனர். 3டியில் உருவாகி யுள்ள இந்தப் படம் மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகை ராய் லட்சுமி ஒரு பாடலுக்கு ஆட இருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிக்கு இடையில் இந்தப் பாடல் இடம்பெற இருக்கிறது.

SCROLL FOR NEXT