பாலிவுட்

ரூ.1000 கோடியை நெருங்கும் பதான்

செய்திப்பிரிவு

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடித்த 'பதான்' திரைப்படம் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியானது.

4 வருடத்துக்குப் பிறகு ஷாருக்கான் நடித்து வெளியான படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சித்தார்த் ஆனந்த் இயக்கிய இந்தப் படம், இந்தி, தமிழ், தெலுங்கில் வெளியானது.

முதல் நாளில் இருந்தே படம் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. வெளியான 20 நாளில், உலகம் முழுவதும் ரூ.953 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளதாக படத்தைத் தயாரித்துள்ள யாஷ்ராஜ் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ரூ.593 கோடியும், வெளிநாடுகளில் ரூ.360 கோடியும் வசூலித்துள்ளது. விரைவில் ரூ.1000 கோடியை நெருங்கும் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT