ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடித்துள்ள படம், ‘பதான்’. கடந்த 25-ம் தேதி வெளியான இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஷாருக்கான் நடித்து வெளியாகி இருக்கும் இந்தப் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
5 நாட்களில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் படத்தின் வெற்றி குறித்து ஷாருக்கான் அளித்துள்ள பேட்டியில், “இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த ஆதித்ய சோப்ரா மற்றும் சித்தார்த் ஆகியோருக்கு நன்றி. நான் வேலை செய்யாத நேரத்தில் எனக்கு ஒரு படத்தை கொடுத்து அதில் ஒரு பகுதியாக இருக்க அனுமதித்தார்கள். கடந்த 4 நாட்களில் நான் கடந்த 4 ஆண்டுகளை மறந்துவிட்டேன். என்னை நேசிக்கும் பல லட்சம் ரசிகர்களைப் பெற்றதால் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறேன்” என்றார்.
அவரிடம் ‘பதான் 2ம் பாகம்’ வருவதற்கு வாய்ப்பிருக்கிறதா? என்று கேட்டதற்கு, “இதன் தொடர்ச்சி உருவானால் அதில் நடிப்பதில் பெருமைப்படுவேன்” என்று கூறியுள்ளார். இதனால் ‘பதான் 2’ உருவாக வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.