ஷாருக்கான், உயிரிழந்த அஞ்சலி 
பாலிவுட்

டெல்லி: காரில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்த ஷாருக்கான்

செய்திப்பிரிவு

டெல்லி விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு தனது என்ஜிஓ மூலமாக நடிகர் ஷாருக்கான் உதவியுள்ளார். அவரின் இந்த செயல் அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டெல்லியில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு மணிக்கு அஞ்சலி சிங் என்ற இளம்பெண் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம், கார் ஒன்றின் மீது மோதியது. இதில் அஞ்சலியின் ஒரு கால் காரில் சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில் அஞ்சலி சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அஞ்சலி சிங்கை பொறுத்தவரை அவர் தான் அவரது குடும்பத்தின் மொத்த பொருளாதார ஆதாரம். அவரது மறைவையடுத்து அந்த குடும்பம் நிர்கதியானது.

இந்த நிலையில், சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட நடிகர் ஷாருக்கான், உயிரிழந்த அஞ்சலி சிங் குடும்பத்துக்கு நிதியுதவி செய்திருக்கிறார். அவர் கொடுத்த தொகை வெளியிடப்படவில்லை. ஆனால், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஷாருக் கான் கொடுத்த நிதியுதவி மிகவும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஷாருக் கான் தனது மீர் பவுண்டேஷன் மூலம் இந்த நிதியை வழங்கியிருக்கிறார். தன்னுடைய தந்தை மீர் தாஜ் முகமது கானின் நினைவாக மீர் பவுண்டேஷனைத் தொடங்கி, அதன் மூலம் ஏழைப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT