முன்னாள் இந்தி நடிகை சோமி அலி, நடிகர் சல்மான் கானை 1991-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை காதலித்து வந்தார். இப்போது தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றில் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். சல்மான் கானை காதலித்தபோது, அவர் தன்னை கடுமையாகத் தாக்கியதாக கடந்த வருடம் பதிவிட்டிருந்தார். பின்னர் அதை நீக்கினார். இப்போது மீண்டும் சல்மான் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: சல்மான் கானுடன்கழிந்த 8 ஆண்டுகள் மிகவும் மோசமானது. அவர் என்னை தாக்கியதோடு தொடர்ந்துஅவதூறாகப் பேசுவார். பல வருடங்களாக,என்னை அவர் காதலி என்று வெளியில் அறிவிக்கவில்லை. அறிவித்தபின், அவர் நண்பர்கள் முன் அவமானப்படுத்துவார், தொடர்ந்து திட்டுவார். ‘நான் ஆண். ஆண்களால்மட்டுமே பெண்களை ஏமாற்ற முடியும்’ என்று கூறி என்னை அடிக்கும் தைரியம் அவருக்கு இருந்தது. வசவு பேச்சு, பாலியல் துன்புறுத்தல், உடல் ரீதியான துஷ்பிரயோகங்களை மோசமாக அவரிடம் அனுபவித்தேன்.
இந்த வேதனையால்தான் அவரைவிட்டு பிரிய முடிவு செய்தேன். ‘சல்மானுடன் நீங்கள் அனுபவித்ததை,இவ்வளவு காலம் கழித்து சொல்லவேண்டிய அவசியம் என்ன?’என்று கேட்கலாம். இது‘பிரேக்கிங் நியூஸ்’ அல்ல.90-ல் இருந்து 1999-வரைநீங்கள் ஏதாவது இதழ்களில் இதை வாசித்திருக்கலாம்.இவ்வாறு சோமி அலி தெரிவித்துள்ளார்.