பாலிவுட்

பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்கள் இன்னும் வரவேண்டும்: மனீஷா கொய்ராலா ஆசை

செய்திப்பிரிவு

பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட திரைப்படங்கள் இன்னும் அதிகமாக வரவேண்டும் என்று நடிகை மனீஷா கொய்ராலா கூறினார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகள் இப்போது அதிகமாக எழுதப்படுகின்றன. வெவ்வேறு வயது பெண்களுக்கான கதைகள் உருவாக்கப்படுகின்றன. பல நடிகைகள் அதுபோன்ற கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிக்கிறார்கள். வித்தியாசமான, விதவிதமான கதைகளை பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வதால், அதுபோன்ற கதைகள் இப்போது உருவாக்கப்படுகின்றன.

இது ஆரோக்கியமான விஷயம். சமூகத்தில் பெண்கள் வலுவாகி வருகிறார்கள். அவர்களை மையப்படுத்திய கதைகள் அதிகமாக வருவதற்கு இயக்குநர்கள், எழுத்தாளர்கள் பெண்களாக இருப்பதும் காரணம். இந்தப் படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றிப் பெறுகின்றன. இளம் நடிகைகள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் அதிகமான பெண் மையப் பாத்திரங்களைக் கொண்ட திரைப்படங்கள் வர வேண்டும் என்று நினைக்கிறேன். இவ்வாறு மனீஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT