கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா 
பாலிவுட்

பிப்.6-ல் கியாரா அத்வானி திருமணம்?

செய்திப்பிரிவு

பிரபல இந்தி நடிகை கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து வருகிறார்.

இருவரும் ஒன்றாக விழாக்களுக்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் கடந்த மாதம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், பிப்ரவரி 6-ல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மார் அரண்மனை ஓட்டலில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கியாரா, ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

SCROLL FOR NEXT