பாலிவுட்

பதான் படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்து வரும் இந்தி படம், ‘பதான்’. இதில் இடம்பெறும் ‘பேஷரம் ரங்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. அதில் தீபிகா, காவி நிற பிகினியில் கவர்ச்சியாகவும், ஷாருக், பச்சை நிற ஆடை அணிந்தும்டூயட் பாடுகின்றனர். இதனால் காவி நிறம் அவமதிக்கப் பட்டுள்ளதாகக் கூறியுள்ள, மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தப் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர். இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அயோத்தியின் ஹனுமன் காரி மட தலைவர் ராஜு தாஸ், ‘‘மத உணர்வை புண்படுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்படும் இதுபோன்ற படங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் படம் எந்தெந்த திரையரங்குகளில் திரையிடப்படுகிறதோ அவற்றைத் தீயிட்டு கொளுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். ‘பதான்’ படத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இதற்கிடையே, கொல்கத்தா பட விழாவில் ஷாருக்கான் பேசும்போது,சமூக வலைதளங்கள் பல நேரங்களில் பிற்போக்கு பார்வையோடு இயக்கப்படுகின்றன. சுற்றி என்ன நடந்தாலும் என்னைப்போன்றவர்கள் நேர்மறையாகவே இருப்பார்கள். எதிர்மறை கருத்துகள் என்னைப் பாதிக்காது என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT