பிரபல இந்தி நடிகை பரினீதி சோப்ரா. பிரியங்கா சோப்ராவின் சகோதரியான இவர் நடித்த இந்தி படங்கள் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை. இப்போது தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
இதுபற்றி பரினீதி கூறும்போது, “இந்தியை தவிர மற்ற மொழிகளிலும் திறமையை நிரூபிக்க விரும்புகிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எதுவாக இருந்தாலும் உடனடியாக அந்த மொழிகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அதற்காக சிறந்த கதை, இயக்குநரை தேடி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.