நடிகை டாப்ஸி, இப்போது இந்திப் படங்களில் கவனம் செலுத்திவருகிறார். அவர் நடித்துள்ள ‘ப்ளர்’ படம் கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது. அவர் பத்திரிகை புகைப்படக் கலைஞர்களிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் சமூக வலைதளங்களில் அதிகமாக ட்ரோல் செய்யப்படுகிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: கடந்த10 வருடமாக பாலிவுட்டில் இருக்கிறேன். சினிமாவை தவிர தனிப்பட்ட வாழ்க்கையில் நடிப்பதில்லை. ஆனால், வீட்டை விட்டு வெளியே வரும்போது புகைப்படக்காரர்கள் என்னை படம் எடுப்பதை விரும்பவில்லை. அப்படி எடுத்தாலும் மரியாதையுடன் அதை செய்ய வேண்டும். நான் மதிப்பதை போல, அவர்களும் மதிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
நான் நடிகை என்றாலும் என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. நான் நேரடியாக சென்றுகாரில் அமர்ந்தாலும் சிலர் கண்ணாடி முன் கேமராவை வைத்துவீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். அதற்கு லட்சக்கணக்கான லைக்ஸ் மற்றும் கமென்ட்ஸ் கிடைக்கிறது. ஆனால், எனக்கு இது பிடிக்கவில்லை.
நான் எந்த பாதுகாவலரும் இல்லாமல்தான் தெருக்களில் நடக்கிறேன். அதற்காக என் சுதந்திரத்தைப் பறிப்பதை அனுமதிக்க முடியாது. நடிகையாக இருப்பது பெரும்பாலும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்துகிறது. நான் என்னமிருகக் காட்சி சாலையில் உள்ள மிருகமா? அடிக்கடி கேமராவுடன் என்னை பின் தொடர? இவ்வாறு டாப்ஸி கோபமாகக் கேட்டுள்ளார்.