பாலிவுட்

பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘சைத்யபூமி’ ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

செய்திப்பிரிவு

மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள அம்பேத்கர் நினைவிடத்தைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த இயக்குநர் சோம்நாத் வாக்மரே இயக்கத்தில் உருவாகும் ஆவணப்படம் ‘சைத்திய பூமி’. டாக்டர் அம்பேத்கரின் நினைவிடமான ‘சைத்திய பூமி’யின் வரலாறு மற்றும் கலாசாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த ஆவணப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் அம்பேத்கரின் நினைவுதினமான டிசம்பர் 6-ம் தேதி மும்பையில் அமைந்துள்ள அவரின் நினைவிடமான ‘சைத்திய பூமி’க்கு வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதனை ஆவணப்படுத்தும் முயற்சியாக இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார் சோம்நாத் வாக்மரே. இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT