பாலிவுட்

கே.டி என்கிற கருப்புதுரை ரீமேக்கில் அபிஷேக் பச்சன்

செய்திப்பிரிவு

‘வல்லமை தாராயோ’, ‘கொல கொலயா முந்திரிக்கா’, ‘மூணே மூணு வார்த்தை’, ‘கே.டி என்கிற கருப்புதுரை’ படங்களை இயக்கியவர் மதுமிதா. இதில் ‘கே.டி.என்கிற கருப்புதுரை’ அதிக வரவேற்பைப் பெற்றது. மு.ராமசாமி, நாக விஷால், யோக் ஜேப்பி, படவா கோபி உட்பட பலர் அதில் நடித்திருந்தனர்.

இந்தப் படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. நிகில் அத்வானி தயாரிக்கும் இதில், மு.ராமசாமி நடித்த கேரக்டரில் அபிஷேக் பச்சன் நடிக்க இருக்கிறார். படப்பிடிப்பு ஜனவரியில் போபாலில் தொடங்க இருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT