காந்தாரா இயக்குநர் ரிஷப் ஷெட்டி 
பாலிவுட்

காந்தாரா ஒரு அட்டகாசமான படம் -  விவேக் அக்னிஹோத்திரி புகழாரம்

செய்திப்பிரிவு

'காந்தாரா ஒரு அட்டகாசமான திரைப்படம்' என 'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்தரி தெரிவித்துள்ளார்.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியிருக்கும் கன்னட படம் 'காந்தாரா'. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படம் வசூலிலும் நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறது. இந்நிலையில் படத்தை பார்த்த 'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தின் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்தரி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''காந்தாரா பார்த்துவிட்டு வந்தேன். அது ஒரு தனித்துவ அனுபவத்தைக் கொடுத்தது.

இதுபோன்ற ஒரு படத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. ரிஷப் ஷெட்டிக்கு எனது வாழ்த்துகள். ரிஷப் நீங்கள் சிறப்பான பணியை செய்துள்ளீர்கள். நான் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறேன். என்னால் படம் பார்த்த அனுபவத்தை பகிர்ந்துகொள்ளாமல் இருக்க முடியவில்லை. படம் முழுக்க கலை மற்றும் நாட்டுப்புற தெய்வ வழிபாடு என வேரூன்றி ஒரு நாவலை படிப்பது போன்ற அனுபவத்தை கொடுத்தது.

குறிப்பாக க்ளைமேக்ஸில் இருந்த எனர்ஜியை நான் எந்த படத்திலும் இதுவரை பார்த்ததில்லை. தீபாவளி முடித்துவிட்டு முதல் வேலையாக அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று படத்தைப்பாருங்கள். இப்படம் ரிஷப் ஷெட்டியின் மாஸ்டர் பீஸ். நான் பார்த்ததிலேயே சிறப்பான ஒரு படம் காந்தாரா. ரிஷப் அட்டகாசமான படத்தை உருவாக்கியிருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT