பாலிவுட்

“உன் திரைப் பயணத்தில் சிறிய பங்காக இருந்தது அதிர்ஷ்டம்” - அலியா பட் குறித்து ரன்வீர் சிங்

செய்திப்பிரிவு

'உன்னுடன் இந்த பயணத்தில் ஒரு சிறிய பகுதியாக இருந்தது என்னுடைய அதிர்ஷ்டம்'' என பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகை ஆலியா பட்டின் திரைப்பயணம் குறித்து தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரான மகேஷ் பட் - நடிகர் சோனி ரஸ்தானி தம்பதிகளின் மகளான ஆலியா பட் கடந்த 2012-ம் ஆண்டு தனது 19-வது வயதில் கரண் ஜோஹரின் 'ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 'ஹைவே', '2 ஸ்டேட்ஸ்', 'டியர் ஜிந்தகி' மற்றும் 'கங்குபாய் கதியாவதி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விரைவில் அவர் 'ஹார்ட் ஆஃப் ஸ்டோன்' படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் கால் பதிக்க உள்ளார். தற்போது ஆலியா பாலிவுட்டில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இது தொடர்பாக ஆலியா பட் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நான் மிகவும் நன்றியுள்ளராக இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் சிறப்பாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில் கமெண்ட் செய்துள்ள ரன்வீர் சிங், ''உன்னுடன் இந்த பயணத்தில் ஒரு சிறிய பகுதியாக இருந்தது என்னுடைய அதிர்ஷ்டம்'' என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. பலரும் அவரின் கமெண்ட்டுக்கு லைக் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT